சுடச்சுட

  

  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆதித்தியா பள்ளி மாநிலப் போட்டிக்குத் தேர்வு

  By DN  |   Published on : 26th November 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு ரெட்டிப்பாளையம் ஆதித்தியா பிர்லா பொதுப்பள்ளி மாணவிகள் மாநிலப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

  அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடர்பான மாவட்ட அளவிலான இளம் விஞ்ஞானிகளுக்கான ஆய்வு சமர்ப்பித்தல் போட்டி அண்மையில் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட அளவில் 20 க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர். 

  இத்தேர்வில் கால நிலை மற்றும் தட்ப வெப்ப நிலையில் மாடி வீட்டுத் தோட்டத்தின் தாக்கம் என்ற தலைப்பில் ரெட்டிப்பாளையம்  ஆதித்தியா பிர்லா பொதுப்பள்ளி மாணவ, மாணவிகள் சமர்ப்பித்த ஆய்வறிக்கை மாநில அளவிலானப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது.

  இதற்கான அறிக்கையை தாக்கல் செய்த ஆதித்தியா பிர்லா பொதுப்பள்ளியின் 9 ஆம் வகுப்பு மாணவிகள் எஸ்.வர்ஷா, கே.அபிநயா, ஆர்.சந்தோஷினி, எஸ்.கே.பிரகதீஷ், எ.ஸ்ரீதர்,  மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் என்.செந்தில்குமார், கே.ஜெயலேகா, எம்.கமலக்கண்ணன், ரெ.சம்பத்குமார் ஆகியோரை  அல்ட்ராடெக் ஆலையின் தலைவர் வி.கணேசன்,பள்ளியின் தாளாளர் எம்.சி,பூவண்ணா மற்றும் ஆலையின் முக்கிய அலுவலர்கள், பள்ளி முதல்வர் கிரண் எஸ்.பட்டேல் ஆகியோர் வாழ்த்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai