சுடச்சுட

    

    யூரியா விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூட்டுறவு வங்கி செயலர், விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம்

    By DN  |   Published on : 26th November 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    யூரியா  உர விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூட்டுறவு வங்கிச் செயலர் மற்றும் விற்பனையாளர்கள் 6 பேரை மாவட்ட ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்தார்.

    அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்க செயலாளர் நல்லப்பன்,விற்பனையாளர் சின்னதுரை, தென்னூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்க செயலாளர் ஏசுதாஸ், விற்பனையாளர்  சின்னப்பராஜ், தழுதாழைமேடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்க செயலாளர் செல்லதுரை, விற்பனையாளர் நமச்சிவாயம்  ஆகியோர் யூரியா உர விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் அவர்கள் 6 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai