சுடச்சுட

    

    சாலைவிபத்தில் உயிரழந்தவரின் குடும்பத்துக்கு முதல் அமைச்சரின் விபத்து நிவாரண உதவியை அரியலூர் சார் ஆட்சியர் சந்திரசேகர்சாகமூரி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

    அரியலூர் மாவட்டம்,திருமானூர் அருகேயுள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் லியோலெனின், இவர் கடந்த 8.9.2014 ல் பெரம்பலூரில் இருந்து அரியலூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது கீழே விழுந்ததில் பலத்தக் காயமடைந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது குடும்பத்துக்கு முதல் அமைச்சரின் விபத்து நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி, ரூ.1 லட்சத்துக்கான காசோலையை விபத்தில் உயிரிழந்த லியோலெனின் தந்தை சவரிமுத்துவிடம் சார்ஆட்சியர் சந்திரசேகர்சாகமூரி வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai