சுடச்சுட

  

  அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ்

  By அரியலூர்,  |   Published on : 27th November 2014 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், திருமழபாடியில் நடைபெற்ற அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் சான்றிதழ்களை செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

  மத்திய அரசு நிறுவனமான மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் மண்டல அலுவலகம் சார்பில், 2 நாள்கள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

  இதில் பங்கேற்ற 150 விவசாயிகளுக்கு சான்றிதழ்களையும், மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பாக 1.5 குவிண்டால் கொள்ளளவு உலோகக் குதிர்களையும் வழங்கி ஆட்சியர் பேசியது:

  விவசாயிகள் மத்திய சேமிப்புக் கிடங்கில் தங்கள் விளைபொருட்களை சேமிப்பதன் மூலம் பூச்சி மற்றும் எலித் தொல்லைகளால் ஏற்படும் இழப்புகள் குறைவது குறித்தும், விளைபொருட்களை குறைந்த விலையில் விற்பதைத் தவிர்ப்பது குறித்தும் இந்தப் பயிற்சி முகாமில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

  மேலும், இருப்பு வைக்கும்போது மாற்றத்தக்க கிடங்கு ரசீது மூலம் விவசாயிகள் வங்கிகளில் கடன் பெறுதல் மற்றும் ரசீதுகள் மூலம் விற்பனை வாய்ப்புகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது என்றார்.

  முகாமில் பங்கேற்ற விவசாயிகளை தஞ்சை மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்துக்கு அழைத்துச் சென்று நேரடி பயிற்சியும், விளக்கமும் அளிக்கப்பட்டது.

  இந்த முகாமில் மத்திய சேமிப்புக் கிடங்கின் சென்னை மண்டல மேலாளர் அ.தி. சங்கர், சென்னை மத்திய சேமிப்புக் கிடங்கு ஆய்வு அலுவலர் ஜி.எம். கருணாகரன், தஞ்சை சேமிப்புக் கிடங்கு மேலாளர் ந. முத்துசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், ஊராட்சித் தலைவர் கர்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai