சுடச்சுட

  

  கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம்

  By அரியலூர்  |   Published on : 27th November 2014 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில் கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்து மானியம் பெறலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, தா.பழூர், ஜயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய வட்டாரங்களில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் கண்வலிக்கிழங்கு என்ற மூலிகைப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

  கண்வலிக்கிழங்கு விதையில் இருந்து எடுக்கப்படும் கொலிச்சிசின் (இர்ப்ஸ்ரீட்ண்ஸ்ரீட்ண்ய்ங்ள்) எனும் அல்கலாய்டு தற்போது அனைத்து வகையான ஆயுர்வேத மற்றும் யுனானி முறையில் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது.அதிக மருத்துவ குணம் கொண்ட இந்தப் பயிர் மிகவும் மென்மையான தண்டை கொண்ட கொடிவகையைச் சேர்ந்தது.

  இப்பயிரை ஒவ்வொரு வருடமும் பயிரிடுவதற்கும், பயிரிடும் போது புதிதாக ஊன்றுகோல் கட்டுவதற்கும், இப்பயிரின் மலர்களுக்கு மகரந்தச் சேர்க்கை செய்வதற்கும் தேசிய மூலிகைப் பயிர்கள் இயக்கத் திட்டத்தின் கீழ், கண்வலிக் கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 50 சதவீதம் மானியமாக ரூ. 68,750 வழங்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்துக்கு 2014-15 ஆம் ஆண்டுக்கு இத்திட்டத்தில் 100 ஹெக்டேருக்கு ரூ. 68.75 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

  எனவே, அரியலூர் மாவட்டத்தில் கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தின் கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் மற்றும் தேசிய வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகியவற்றுடன் தங்கள் வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தங்கள் பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai