திருமானூரில் யூரியா தட்டுப்பாடு: மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
By அரியலூர் | Published on : 27th November 2014 01:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
யூரியா உரத்தட்டுப்பாட்டைக் கண்டித்து, திருமானூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமானூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் ஒன்றியச் செயலாளர் தங்கமலை தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், திருமானூர் பகுதியில் விவசாயிகளுக்கு யூரியா உரம் கிடைப்பதில்லை, தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பால்குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், திருமானூர் ஒன்றியத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், மாவட்டக்குழு உறுப்பினர் சவுரிராஜன், விவசாய சங்கத் தலைவர் மணியன், வட்டக்குழு புனிதன், சாமிதுரை, சுப்பிரமணியன், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'