சுடச்சுட

  

  தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட விழிப்புணர்வுக் கூட்டம்

  By அரியலூர்  |   Published on : 27th November 2014 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தீவிர பங்கேற்புடன் கூடிய விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

  கூட்டத்துக்கு அரியலூர் மாவட்ட ஊராட்சி செயலர் கணேசன் தலைமை வகித்தார். வட்டார ஊராட்சி அலுவலர் க. பிரபாகர் வரவேற்றார்.

  இதில், வீடுவீடாகக் கணக்கெடுக்க வரும் அலுவலர்களிடம் குடும்பம் குறித்த குடும்பத் தலைவரின் பெயர், இனம், வீட்டில் கழிப்பறை உள்ளதா, பயன்படுத்தப்படுகிறதா, வீட்டில் உள்ள ஆடு, மாடு, கோழி விவரங்கள், சிறு விவசாயி, குறு விவசாயி, நிலமற்ற கூலி என்பன உள்ளிட்ட சரியான விவரங்களை தெரிவித்து கணக்கெடுப்புக்கு உதவ வேண்டும் என ஊராட்சி செயலர் கேட்டுக்கொண்டார்.

  அதன்படி, இந்த ஊராட்சியில் நடைபெற்ற கணக்கெடுப்பில், 1,117 குடும்பங்கள் உள்ளன. அவற்றில், 577 குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் 21 பேர் உள்ளனர்.

  307 வீடுகளில் கழிப்பறைகள் உள்ளன. 568 குடும்பங்களில் ஆடு, மாடுகள், கோழிகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் கணக்கெடுப்பு விவரங்களை மக்களிடம் தெரிவித்தார். ஊராட்சித் தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai