சுடச்சுட

  

  ஷேர் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் காயம்

  By அரியலூர்  |   Published on : 27th November 2014 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூரில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் புதன்கிழமை காயமடைந்தனர்.

  அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி புதன்கிழமை மாலை ஷோó ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. ஜயங்கொண்டம் சாலையில் இந்த ஆட்டோ சென்றபோது மின்நகர் அருகே சாலையின் நடுவே இருந்த தடுப்புக் கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில், ஆட்டோ ஓட்டுநர் மாணிக்கம் (20), ஆட்டோவில் பயணம் செய்த வாலாஜாநகரத்தைச் சேர்ந்த தமிழரசி (22), பானுமதி (50), தேவகி (32), அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழ்நிலா (16), திவ்யா (16), நிரோஷா (17), ஜெயப்பிரிதா (17), மாணவர் மாதவன் (14) ஆகிய 9 பேர் காயமடைந்தனர்.

  இவர்கள் அனைவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai