சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் யூரியா உர விற்பனையில் முறைகேட்டைத் தடுக்க அலுவலர்களின் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

    விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியர் மேலும் கூறியது:

    அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 586 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. இது கடந்தாண்டைவிட 15 மி.மீ. கூடுதல் ஆகும். இதனால் சம்பா நெல் சாகுபடி பணிகள் மும்முரமடைந்துள்ளன.

    உரங்களை பொறுத்தவரை யூரியா 228 டன், டி.ஏ.பி. 624 டன், பொட்டாஷ் 548 டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் 597 டன் ஆகியவை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளன.

    சம்பா பருவத்துக்கு இதுவரை வேளாண் விரிவாக்க மையம் மூலம் சான்று விதைகள் 251 டன்னும், கூட்டுறவுத் துறை மூலம் 16 டன், தனியார் மூலம் 176 டன் என கூடுதலாக 443 டன் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும், 23 டன் சான்று விதைகள் கையிருப்பில் உள்ளன என்றார் ஆட்சியர்.

    மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், வேளாண் இணை இயக்குநர் குணசேகரன்,மின்வாரிய கோட்டப்பொறியாளர் தேவேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai