சுடச்சுட

    

    யூரியா உர விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் 3 பேர் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    அரியலூர் மாவட்டத்தில், யூரியா உரம் கிடைப்பதில்லை, தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு அவை விற்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் வேளாண் துறை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதில் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், பளிங்காநத்தம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் செயலர் ஜெயராமன், செந்துறை ஒன்றியம், பொன்பரப்பி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலர் சுமதி, உர விற்பனையாளர் ஆதவன் ஆகியோர் உர விற்பனை முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai