Enable Javscript for better performance
இயந்திரம் மூலம் நெல் நடவு செய்த விவசாயிகளுக்கு மானியம் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இயந்திரம் மூலம் நெல் நடவு செய்த விவசாயிகளுக்கு மானியம் அளிப்பு

    By அரியலூர்  |   Published on : 29th November 2014 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்த 100 விவசாயிகளுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் மானியத் தொகைக்கான காசோலையை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எம்பி சந்திரகாசி முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில், 100 விவசாயிகளுக்கு தலா ரூ. 1,500 வீதம் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான மானியத் தொகையை வழங்கி ஆட்சியர் பேசியது: அரியலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் சராசரி மழை அளவை விட சற்றே கூடுதலாக மழை பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவரும் ஒரே சமயத்தில் நெல் நாற்றங்கால் தயாரித்து, ஒரே நேரத்தில் நடவு செய்ய வேண்டிய நிலையில் வேலை ஆள்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இந்தச் சூழலில் விவசாயிகளின் சிரமத்தை தவிர்க்க வேண்டி, நெல் நடவுப் பணிகளை இயந்திரம் மூலம் மேற்கொள்ள அரசு திட்டம் வகுத்துள்ளது.

    இயந்திர நெல் நடவை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டத்துக்கு 680 ஹெக்டேரில் இயந்திர நடவு செய்ய ரூ. 1.20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேளாண்மைத்துறை கள அலுவலர்கள் முடுக்கி விடப்பட்டு, இயந்திரம் மூலம் நெல் நடவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் ஆட்சியர் சரவணவேல்ராஜ்.

    இதில், எம்பி சந்திரகாசி பேசியது: தமிழக அரசின் பல்வேறு திட்டங்களால் அரியலூர் மாவட்டத்தில் ஏழை, எளிய விவசாயிகள் அதிகளவில் பயன்பெற்று வருகின்றனர் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் ஏ.ஆர். குணசேகரன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai