சுடச்சுட

  

  அரியலூர் அருகே வறுமை ஒழிப்புச் சங்க பணத்தை மோசடி செய்த பெண் மீது வழக்கு

  By அரியலூர்  |   Published on : 30th November 2014 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் அருகே கிராம வறுமை ஒழிப்புச் சங்கப் பணத்தை மோசடி செய்ததாக பெண் செயலர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

  அரியலூர் மாவட்டம், குணமங்கலம் கிராமத்தில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் உள்ளது. இந்தச் சங்கத்துக்கு அரியலூர் மாவட்ட புதுவாழ்வுத் திட்டம் மூலம் 33 பேருக்கு ரூ. 2 லட்சத்து 34 ஆயிரம் கடனாக வழங்கப்பட்டது.

  இச் சங்கத்தில் செயலராகப் பணியாற்றும் மணிமேகலை உறுப்பினர்களிடமிருந்து சங்கத்துக்கு செலுத்த வேண்டிய தவணை தொகையை வசூல் செய்துள்ளார். அவர் வசூல் செய்த தொகை ரூ. 97,500 ஐ அவர் சங்கத்துக்கு செலுத்தாமல் இருந்தது, தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதுவாழ்வுத் திட்ட துணை மேலாளர் சுரேஷ் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில், காவல் ஆய்வாளர் மகேஷ் வழக்குப் பதிந்து தலைமறைவான மணிமேகலையை தேடி வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai