சுடச்சுட

    

    அரியலூர் அருகே வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தம்பதி காயமடைந்தனர்.

    அரியலூர் மாவட்டம், திம்மூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ், இவர் தனது மனைவி ஜெயலட்சுமியுடன் சில்லக்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரும் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புகாரின்பேரில், அரியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜவேல் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் கிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai