சுடச்சுட

  

  ஜயங்கொண்டத்தில் 300 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா

  By அரியலூர்,  |   Published on : 30th November 2014 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜயங்கொண்டத்தில் 300 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் சனிக்கிழமை வழங்கினார்.

  ஜயங்கொண்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உடையார்பாளையம் வட்டத்தைச் சேர்ந்த 300 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி ஆட்சியர் பேசியது:

  தமிழக அரசு கிராமப்புறத்தில் வசிக்கும் விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்காக விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி வருகிறது.

  அந்த வகையில் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள உப்பிலியக்குடி, சாத்தம்பாடி, ஸ்ரீபுரந்தான், கடம்பூர், காக்காபாளையம், நடுவலூர், வெண்மான்கொண்டான் கிழக்கு மற்றும் மேற்கு கீழநத்தம், ஆதிச்சனூர், நாச்சியார்பேட்டை, மணகெதி, நடுவலூர் கிழக்கு, சுத்தமல்லி, கோவிந்தபுரம், உடையவர்தீயனூர், அய்யூர், பருக்கல் மேற்கு, கிழக்கு, உல்லியக்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 300 பேருக்கு இன்று (சனிக்கிழமை) விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள பொதுமக்கள் அலுவலர்களை அணுகி இதுபோன்ற விலையில்லா நலத் திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம் என்றார்.

  இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், உடையார்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் கருணாகரன், ஜயங்கொண்டம் வட்டாட்சியர் திருமாறன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai