சுடச்சுட

  

  ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

  By அரியலூர்,  |   Published on : 30th November 2014 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, உடையார்பாளையம் பயறனீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு உடையார்பாளையம் நகர அதிமுக செயலர் பெருமாள் தலைமை வகித்தார்.

  பயறனீஸ்வரருக்கும், நந்தியெம்பெருமான் மற்றும் அம்பாளுக்கும், பால், பன்னீர், சந்தனம், இளநீர், திருநீறு, திரவியப்பொடி, மஞ்சள்பொடி உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 1008 தேங்காய் உடைக்கப்பட்டு பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  இதில் அதிமுக மாவட்டச் செயலர் தாமரை. ராஜேந்திரன், எம்எல்ஏ துரை. மணிவேல், அதிமுக மாவட்டத் துணைச் செயலர் தங்க. பிச்சமுத்து, மாவட்ட மாணவர் அணிச் செயலர் ஓ.பி. சங்கர், மாவட்ட இளைஞர் அணிச் செயலர் அறிவு (எ) சிவசுப்பிரமணியன், அரியலூர் ஒன்றியச் செயலர் செல்வராஜ் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai