சுடச்சுட

    

    பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

    By ஜயங்கொண்டம்,  |   Published on : 30th November 2014 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், ரெட்டியூர் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த மதி மனைவி ஜான்சிராணி. இவரிடம் ஜயங்கொண்டம் காந்தி நகரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் அரிச்சந்திரன் (எ) டேவிட் அரியலூரில் உள்ள அட்மின் தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராகச் சேர்ந்தால் கடன் பெற்றுத்தரப்படும் எனக் கூறினாராம்.

    இதை நம்பிய ஜான்சிராணி, பலரை உறுப்பினராகச் சேர்த்து தலா ரூ. 150 வீதம் வசூலித்து டேவிட்டிடம் கொடுத்துள்ளார். ஆனால், இதுவரை யாருக்கும் கடன் வழங்கப்படவில்லையாம்.

    இந்நிலையில், சனிக்கிழமை மீன்சுருட்டி பகுதியில் டேவிட் இருப்பதை அறிந்த ஜான்சிராணி, அங்கு சென்று அவரிடம் இதுகுறித்து கேட்டாராம்.

    அதற்கு அவரை தகாதவார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்தாராம் டேவிட்.

    இதுகுறித்து ஜான்சிராணி மீன்சுருட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார் வழக்குப் பதிந்து டேவிட்டை கைது செய்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai