சுடச்சுட

  

  ஹாக்கி: மான்ட்போர்ட் பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி

  By அரியலூர்,  |   Published on : 30th November 2014 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஹாக்கியில் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

  தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், பெரம்பலூர் மண்டல அளவில் (பெரம்பலூர், கருர், அரியலூர் மாவட்டங்கள் அடங்கியது) போட்டிகள் கரூரில் அண்மையில் நடைபெற்றது.

  17 மற்றும் 19 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் ஹாக்கிப் போட்டியில் அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் இடத்தையும், 19 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் கைப்பந்துப் போட்டியில் முதல் இடத்தையும், செஸ் போட்டியில் 11 வயது பிரிவில் மாணவர் ஆன்ஸ்லெம் பிலேவியன் முதல் இடத்தையும், கேரம் போட்டியில், இரட்டையர் பிரிவில் ஐசக் அமல்ராஜ், நித்திகுமார் முதல் இடத்தையும் மற்றும் பல்வேறு போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் இரண்டாம், மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மாநில அளவில் பங்கு பெற தகுதி பெற்ற மாணவ, மாணவிகளையும், அவர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் தர்மலிங்கம், ரூத்தலின் ஆன்ஸி, ஹாக்கி பயிற்சியாளர் ஜபருல்லா ஆகியோரை மான்ட்போர்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜான்சன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

  இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் மணி இமானுவேல், அந்தோனிசாமி மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai