Enable Javscript for better performance
அரண்மனைக்குறிச்சி தில்லை காளி கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேட்டி,சேலை- Dinamani

சுடச்சுட

    

    அரண்மனைக்குறிச்சி தில்லை காளி கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேட்டி,சேலை

    By அரியலூர்,  |   Published on : 17th April 2015 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அரண்மனைக்குறிச்சி தில்லை காளி கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வேட்டி,சேலைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் அரண்மனைக்குறிச்சி கிராமத்தில் தில்லை காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உண்டியல் மூலம் வசூலாகும் பணத்தை சில்லரைக் காசுகளாக மாற்றி ஒவ்வொரு தமிழ்ப்புத்தாண்டு அன்றும் பொதுமக்களுக்கு "பூக்காசு' என்னும் "பிடிக்காசு' வழங்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வேட்டி,சேலைகளும் வழங்கப்படும். இந்தப் பிடிக்காசு மூலம் ஏதாவது மங்களப்பொருட்கள் வாங்கினால் அவர்கள் வாழ்க்கையில் அதிக சுபிட்சம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

    நடப்பாண்டில் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பூசாரி குமார் பக்தர்களுக்கு பூக்காசு வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வேட்டி மற்றும் சேலை வழங்கினார். பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அரியலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன், துரை.மணிவேல் எம்.எல்.ஏ உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai