Enable Javscript for better performance
ஏப்.21 ல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஏப்.21 ல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

    By அரியலூர்,  |   Published on : 17th April 2015 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜயங்கொண்டத்தில் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் ஏப். 21 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் முகமது யூசுப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக தொழிலாளர் துறையின் சார்பில் தொழிலாளர் நல வாரியத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரையும் உறுப்பினர்களாக்கும் பொருட்டு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வாசவி திருமண மண்டபத்தில் ஏப். 21 ஆம் தேதி காலை 10 மணி முதல் இம்முகாம் நடைபெறுகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்பவர்கள், கடைகள், நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், தெருச்சுமை வியாபாரிகள், தையல் கலைஞர்கள், நெசவுத்தொழில், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள், உள்ளிட்ட 60 வகையான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் என அனைவரும் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேரலாம்.

    மேலும், கட்டுமானம் சம்பந்தப்பட்ட கொத்தனார், சித்தாள், கம்பி கட்டுநர், பிளம்பர்,பெயிண்டர், உள்ளிட்ட 38 வகையான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் சேரலாம்.

    18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர தகுதியுடையவர்கள். உறுப்பினராக விருப்பமுள்ளவர்கள் குடும்ப அட்டை, வயதுச்சான்று, மாற்றுச்சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், புகைப்படம் 3, ஆதார் அட்டை நகல், செய்யும் வேலைக்கான கிராம நிர்வாக அலுவலரின் சான்று, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் மேற்கண்ட முகாமில் நேரில் கலந்து கொண்டு தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai