Enable Javscript for better performance
சின்னவெங்காயப் பயிரில் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை- Dinamani

சுடச்சுட

    

    சின்னவெங்காயப் பயிரில் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை

    By அரியலூர்  |   Published on : 17th April 2015 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் இலைப்பேன் தாக்குதலில் இருந்து சின்னவெங்காயத்தை காப்பது குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ராஜாஜோஸ்லின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    அரியலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் 125 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட தட்பவெப்ப நிலைக்கு கோ. 1 முதல் 5 வரை மற்றும் எம்டியு 1 ஆகிய சின்னவெங்காய ரகங்கள் ஏற்றது. வெங்காயம் நட்ட 30 நாட்கள் கழித்து மேலுரமாக ஏக்கருக்கு 12 கிலோ தழைச்சத்து கொடுக்கக் கூடிய யூரியா உரத்தை அளிக்க வேண்டும். சின்னவெங்காயத்தில் பல்வேறு நோய்கள் தாக்கி மகசூல் இழப்பை உண்டு பண்ணுகிறது.

    குறிப்பாக, இலைப்பேன் தாக்குதல் பெரும் இழப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்நோய் தாக்குதலின் போது பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்தப் பூச்சிகள் இலைகளை சுரண்டி உறிஞ்சும். இதனால், இலைகள் வெண்திட்டுக்களாகக் காணப்படும். இலைகள் நுனியில் வாடும்.

    இதை கட்டுப்படுத்த ஏக்கருக்கு மீதைல் டெமட்டான் 200 மி.லி. அல்லது பாஸ்போமிடான் 200 மி.லி. என்ற அளவில் தெளிக்க வேண்டும். அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருக்கி நடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    மேலும், வெங்காய ஈ தாக்குதலின்போது மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப்புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தை குடைந்து தின்று அழுகச் செய்யும். இதை கட்டுப்படுத்த புரபனோஸ் 50இசி. ஒரு மிலி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்பு மாலிக்டைரக்சைடு என்ற பயிர் முளைப்பை கட்டுப்படுத்தும் பயிர் விளையல் ரசாயனப்பொருளை 2.5 மி.லி. தண்ணீர் என்ற விகிதத்தில் இலைவழி ஊட்டமாக தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வெங்காயத்தின் சேமிப்பு காலத்தை அதிகப்படுத்தலாம். மேலும், வெங்காயத்தை பிடுங்கிய பிறகு மேல்தாள்களை நீக்கி வெங்காயத்தை காயவைக்க வேண்டும். பிறகு நல்ல காற்றோட்டமுள்ள அறைகளில் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் சின்ன வெங்காயத்தில் அதிக மகசூல் பெறமுடியும். சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய அலுவலகத்தை தொடர்புகொண்டு மேலும் தகவல் பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai