Enable Javscript for better performance
நீராதாரத்தை பெருக்கும் திட்டத்துக்கு முக்கியத்துவம்- Dinamani

சுடச்சுட

    

    நீராதாரத்தை பெருக்கும் திட்டத்துக்கு முக்கியத்துவம்

    By அரியலூர்,  |   Published on : 17th April 2015 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பா.ம.க ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நீராதாரத்தை பெருக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார் வன்னியர் சங்கத் தலைவர் குரு எம்.எல்.ஏ.

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் கோட்டியால் கிராமத்தில் மாநாட்டு விளக்கப் பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில்,அவர் மேலும் பேசியது: வருகின்ற 2016 சட்டப்பேரவை தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள வேளையில், அதற்கான களப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியைப் போல வேறு எந்த ஆட்சியிலும் உருப்படியான திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. மேலும், அதிமுக ஆட்சியில் அரசின் மது பானக்கடையில் இன்று இளைஞர்கள் மது அருந்தி தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதனால் பலரது குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும்.

    இதுமட்டுமன்றி,மற்ற மாநிலங்களில் மாநிலத்தின் நீராதாரத்தை காக்கும் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஆண்ட திராவிடக் கட்சிகள் மக்களை ஏமாற்றிவிட்டன.

    தமிழக மக்கள் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பா.ம.க.வை எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும், சேலத்தில் நடைபெற உள்ள பாமக மாநாட்டில் தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் திரண்டு வரவேண்டும் என்றார் அவர்.

    கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர்(கிழக்கு) கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றியச்செயலர் (மேற்கு) அரங்க.நக்கீரன் வரவேற்றார். மாநில துணைச் செயலாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai