Enable Javscript for better performance
மனுநீதி நாள் முகாமில் ரூ. 12.39 லட்சம் நலத்திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    மனுநீதி நாள் முகாமில் ரூ. 12.39 லட்சம் நலத்திட்ட உதவிகள்

    By அரியலூர்,  |   Published on : 17th April 2015 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், அணைக்குடம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் 63 பயனாளிகளுக்கு ரூ. 12.39 லட்சம் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

    ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், 24 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள், 10 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை, 17 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் திருமண உதவித்தொகைக்கான காசோலை, 3 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை, 3 பேருக்கு ரூ. 67,170 மதிப்பில் வேளாண் இடுபொருட்கள், 3 பேருக்கு ரூ. 9.92 லட்சத்தில் மினி டிராக்டர், 2 பேருக்கு தலா ரூ. 2500-ல் கைத்தெளிப்பான், ஒருவருக்கு ரூ. 5,225 மதிப்பில் கால்மிதி தெளிப்பான் என மொத்தம் 63 பேருக்கு ரூ. 12,39,645 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியது:

    இந்த ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் 3 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது.

    இதில், 534 மனுக்கள் பெறப்பட்டு, 381 மனுக்கள் ஏற்கப்பட்டு அவற்றுக்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 36 பேருக்கும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 235 பேருக்கும் மாதாந்திர உதவித்தொகை ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.

    சமூக நலத்துறை சார்பில், 19 பேருக்கு ரூ. 6 லட்சம் திருமண உதவித்தொகை, 76 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. 1,235 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா முகாமில் 109 மனுக்கள் பெறப்பட்டு, 58 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.

    உடையார்பாளையம் கோட்டாட்சியர் அ. ராஜகோபால் வரவேற்றார். தா.பழூர் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயசுதா, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் கணேசன், தனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சீனிவாசன், தாட்கோ மாவட்ட மேலாளர் என். கோபால், ஊராட்சித் தலைவர் சிவகுருநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வட்டாட்சியர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai