Enable Javscript for better performance
அரியலூரில் ஜன. 31-ல் ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் ஜன. 31-ல் ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம்

    By அரியலூர்,  |   Published on : 27th January 2015 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூரில் ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் 31-ம் தேதி நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு புதிதாக ஆள் சேர்ப்பு முகாம் ஜன. 31 ஆம் தேதி அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், தவறிய ஆண், பெண் இருபாலரும் சேரலாம். உடல் ஆரோக்கியத்துடன், 35 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை நகல், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். மேலும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்திய குடியுரிமை பெற்றவராகவும், அரசியல் கட்சி தொடர்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.

    ஊர்க்காவல் படைக்கு 3 ஆண்டுகள் கண்டிப்பாக வருகைதர வேண்டும். தேர்வுக்கு வருபவர்களுக்கு பயணப்படி வழங்கப்பட மாட்டாது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 45 நாட்கள் கவாத்து பயிற்சி அளிக்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai