Enable Javscript for better performance
கற்பித்தலில் புதிய உத்தி:ஆசிரியர்கள் இணையத்தில் பதிவுசெய்யலாம்- Dinamani

சுடச்சுட

    

    கற்பித்தலில் புதிய உத்தி:ஆசிரியர்கள் இணையத்தில் பதிவுசெய்யலாம்

    By அரியலூர்,  |   Published on : 27th January 2015 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் கற்றல், கற்பித்தலில் புதிய உத்திகளை செயல்படுத்தும் ஆசிரியர்கள் அது குறித்து இணையதளத்தில் பதிவுசெய்யலாம் என ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்முறையை மேலும் வலுப்படுத்த தமிழகப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் கற்றல், கற்பித்தலை மேம்படுத்துவதற்காகவோ, மாணவர்களின் முழுமையான திறன்களின் வளர்ச்சிக்காகவோ, பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவோ ஏதேனும் புதிய உத்திகளைச் செயல்படுத்தியிருந்தால், அதை மற்ற ஆசிரியர்களோடு பகிர்ந்துகொள்ள பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

    எனவே, இந்த உத்திகளை ஆசிரியர்கள் வெளிப்படுத்த இதற்கெனத் தனியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் (ரரர.ற்ய்ள்ஸ்ரீங்ழ்ற்.ர்ழ்ஞ்ண்ய்ய்ர்ஸ்ஹற்ண்ர்ய்) பதிவுசெய்து கொள்ளுமாறு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா. இளங்கோவனை (முதுநிலை விரிவுரையாளர்) 99527 54883 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai