Enable Javscript for better performance
கணினி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர், ஜன. 27: அரியலூர் பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் கணினி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

    அரியலூர் - ஜயங்கொண்டம் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் 54  இளைஞர்களுக்கு கணினி அச்சுக்கோர்ப்பு (ஈபட) மற்றும் கணினி டேலி பயிற்சி அளிக்கப்பட்டது. 

    பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை பெடரல் வங்கி மேலாளர் பூபதி மற்றும் அரியலூர் மாவட்ட மகளிர் திட்ட உதவி அலுவலர் எஸ். சரவணபாண்டியன் ஆகியோர் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சரவணபாண்டியன் பேசும்போது, பயிற்சி முடித்த அனைவரும், அரசின் மானிய கடன் திட்டத்தை பயன்படுத்தி அதன்மூலம் சுயதொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற வேண்டும். மேலும் இந்நிறுவனத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

    இதை ஏழை, எளிய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்,  இதுவரை இந்நிறுவனத்தின் மூலம் இதுவரை இந்நிறுவனத்தின் மூலம் 1800 க்கும் மேற்பட்டோர் தொழில் முனைவோராக உருவாகியுள்ளனர் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கியின் முதன்மை மேலாளர் டி.முரளிகிருஷ்ணன், நிறுவன இயக்குநர் எஸ்.எஸ். துளசிமாதவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai