Enable Javscript for better performance
செந்துறையில் அனுமதியின்றி செம்மண் அள்ளியதை தடுத்த ஊராட்சித் தலைவரைக் கொல்ல முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    செந்துறையில் அனுமதியின்றி செம்மண் அள்ளியதை தடுத்த ஊராட்சித் தலைவரைக் கொல்ல முயற்சி

    By அரியலூர்  |   Published on : 28th January 2015 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர், ஜன. 27: அரியலூர் மாவட்டம், செந்துறையில் திங்கள்கிழமை இரவு அனுமதியின்றி செம்மண் அள்ளியதை தடுத்த ஊராட்சித் தலைவரை ஜே.சி.பி. இயந்திரத்தை ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செந்துறையில் மின்வாரிய அலுவலகத்துக்கு எதிரே தனியார் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு கடந்த மாதம் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்கும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டது. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சித் தலைவர் செல்வராசு மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், திங்கள்கிழமை எவ்வித அனுமதியும் இன்றி மீண்டும் சாலைப் பணி மேற்கொள்ளப்பட்டது. தகவலறிந்த ஊராட்சித் தலைவர் செல்வராசு, விவசாயிகள், பொதுமக்கள் திங்கள்கிழமை இரவு சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

    அப்போது அங்கு அனுமதி இன்றி செம்மண் அள்ளப்படுவதை கண்டு உடையார்பாளையம் கோட்டாட்சியருக்கும், செந்துறை வட்டாட்சியருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. செந்துறை கிராம நிர்வாக அலுவலர் கணேசன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai