Enable Javscript for better performance
ஆண்டிமடம் அருகே இரு சக்கர வாகனம் மோதி பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிமடம் அருகே இரு சக்கர வாகனம் மோதி பெண் சாவு

    By அரியலூர்,  |   Published on : 01st June 2015 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிமடம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சூரக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்தம்மாள்(55). இவர், சனிக்கிழமை மாலை எதிரே குடியிருக்கும் அண்டைவீட்டாரின் வீட்டுக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தங்கதுரை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பத்தம்மாள் மீது மோதியது.

    இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு,சிகிச்சை பலனின்றி பத்தம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து, ஆண்டிமடம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai