Enable Javscript for better performance
ஆய்வக உதவியாளர் தேர்வு: அரியலூரில் 12,442 பேர் எழுதினர்- Dinamani

சுடச்சுட

    

    ஆய்வக உதவியாளர் தேர்வு: அரியலூரில் 12,442 பேர் எழுதினர்

    By அரியலூர்,  |   Published on : 01st June 2015 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடத்துக்கான தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 12,442 பேர் பங்கேற்றனர்.

    தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    அரியலூர் மாவட்டத்தில் 27 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு எழுத 5,277 ஆண்களும், 8,903 பெண்களும் என 14,180 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வில் 12,442 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். 1,738 பேர் வர வில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் சசிகலா, மாவட்டக் கல்வி அலுவலர்கள் பவுன் ஆகியோர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வுக்கூடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பெரம்பலூரில் 6,773 நபர்கள் பங்கேற்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கான தேர்வில் 6,773 பேர் தேர்வெழுதினர்.

    மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் 21 மையங்களில் அமைக்கப்பட்டிருந்த 400 தேர்வுக் கூடங்களில் 6,773 நபர்கள் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai