தரச் சான்று இல்லாமல் இரும்புப்பொருள் விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்
By அரியலூர் | Published on : 01st June 2015 04:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்டத்தில் உரிய தரச் சான்று பெறாமல் இரும்புப்பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் எ. சரவணவேல் ராஜ்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் இரும்பு அமைச்சம், இரும்புத்தொழிலில் தயாரித்தல், இருப்பு வைத்தல், விற்பனை மற்றும் பகிர்மானம் செய்தல் ஆகியவற்றில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இரும்பு தொழிலில் ஈடுபடும் தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் அனைவரும் இரும்பு மற்றும் இரும்பிலான பொருட்களுக்கு இந்திய தர நிர்ணய நிறுவனத்தால் (ஆன்ழ்ங்ஹன் ர்ச் ஐய்க்ண்ஹய் ள்ற்ஹய்க்ஹழ்க்ள்) வழங்கப்படும் கட்டாயச் சான்றினை பெற்றிருக்க வேண்டும்.
மேலும், வணிக நிறுவனங்களில் இரும்புப்பொருள்களை உற்பத்தி செய்வதோ,இருப்பு வைப்பதோ, விற்பனை செய்வதோ அல்லது கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்தவோ கூடாது.
மேலும், இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு விதிமீறும் நிறுவனம் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.