Enable Javscript for better performance
போக்குவரத்துக்கு இடையூறாக மரங்கள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    போக்குவரத்துக்கு இடையூறாக மரங்கள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    By அரியலூர்  |   Published on : 01st June 2015 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், திருமானூர் தாலுகா ஏலாக்குறிச்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக

    உள்ள புளியமரங்களை வெட்டக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட்

    கட்சியினர் சனிக்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஏலாக்குறிச்சி - கோவிலூர் சாலையில் கோவிலூர் அருகே உள்ள திருப்பத்தில் உள்ள 2 புளிய மரங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், இம்மரங்களை அப்புறப்படுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விபத்துகளை ஏற்படுத்தும் மரங்களை நடுஇரவில் வெட்டும் போராட்டத்தை அறிவித்து சனிக்கிழமை இரவு மரங்களை வெட்ட முயன்றனர்.

    தகவலறிந்த அரியலூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் போலீஸார் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் இதுகுறித்து அரியலூர் சார் ஆட்சியர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பேசி சுமூகத் தீர்வு காணலாம் என்று கூறியதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai