Enable Javscript for better performance
வாடகை உயர்வு கோரி டிப்பர் லாரி உரிமையாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வாடகை உயர்வு கோரி டிப்பர் லாரி உரிமையாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

    By அரியலூர்  |   Published on : 01st June 2015 04:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அருகே டிப்பர் லாரி உரிமையாளர்கள் வாடகை உயர்வு கோரி சுரங்கத்தினுள் லாரியை நிறுத்தி ஞாயிற்றுக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர் அருகே காட்டுப்பிரிங்கியத்தில் தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மற்ற சிமெண்ட் ஆலைகள் வாடகையை உயர்த்தியுள்ள நிலையில், இந்த சிமெண்ட் ஆலை நிர்வாகம் மட்டும் வாடகையை உயர்த்த மறுத்துள்ளனர். இதைக்கண்டித்து, சுரங்கத்தின் உள்ளே 300-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை நிறுத்தி உரிமையாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குறிப்பிட்ட எடைக்கு நிகரான வாடகையை உயர்த்தும் வரை போராட்டம் தொடரும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai