Enable Javscript for better performance
கலை நிகழ்ச்சியில் தகராறு: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே கலை நிகழ்ச்சியின்போது தகராறு செய்ததாக இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    அரியலூர் மாவட்டம், காரைப்பாடியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (32) சில்லக்குடி ஊராட்சி 5ஆவது வார்டு உறுப்பினராக உள்ளார்.

    சென்னை உயர்நீதிமன்ற அனுமதியோடு ஜெயகுமார் காரைப்பாடி கிராமத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை அண்மையில் நடத்தினார். அப்போது மேத்தால் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (46), தமிழரசன் (31) ஆகியோர் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தபோது தகராறு செய்தனராம்.

    இதுகுறித்து ஜெயகுமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அரியலூர் போலீஸார் பன்னீர்செல்வம், தமிழரசன் இருவரையும் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai