Enable Javscript for better performance
டிப்பர் லாரிகள் 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் - Dinamani

சுடச்சுட

    

    டிப்பர் லாரிகள் 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்

    By அரியலூர்  |   Published on : 02nd June 2015 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அருகே 30 சதவீத வாடகை உயர்வு கேட்டு தனியார் சிமென்ட் ஆலை சுரங்கத்தில் டிப்பர் லாரிகள் 2வது நாளாக திங்கள்கிழமையும் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர் மாவட்டத்தில் தனியார் சிமென்ட் ஆலைகள் அதிக அளவில் இயங்கி வருகிறது. அரசு நிர்ணயித்த அளவுப்படி 30 சதவீத வாடகை கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஒட்டுமொத்தமாக கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் 1 கோடி டன்னுக்கு மேல் சிமென்ட் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து டிப்பர் லாரிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கின.

    அரியலூரை அடுத்த காட்டுப்பிரிங்கியத்தில் தனியார் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த தனியார் சிமென்ட் ஆலையில் மட்டும் அரசு அறிவித்த 30 சதவீத வாடகை உயர்வு வழங்கப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் 100-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் சிமென்ட் உற்பத்தி மூலப் பொருள்களை ஏற்றாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தம் திங்கள்கிழமையும் நீடித்தது. பிரச்னைக்கு சுமூக தீர்வு காணும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று டிப்பர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai