Enable Javscript for better performance
துப்புரவுத் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரில் துப்புரவுத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

    ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, ஏஐடியுசி பணியாளர் சம்மேளன துணைப் பொதுச் செயலர் டி. தண்டபாணி தலைமை வகித்தார். ஏஐடியுசி தமிழ்நாடு மாநில பொதுச் செயலர் டி.எம். மூர்த்தி உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

    அரியலூர் நகரில் மக்கள் பெருக்கத்துக்கு ஏற்ப கூடுதலாக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேலாக துப்புரவு பணி செய்து வரும் தாற்காலிக பெண் தொழிலாளர்களுக்கு ரூ. 147 கூலி நிர்ணயம் செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தாற்காலிக ஆண் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும், பணிக்காலத்தில் மரணமடைந்த துப்புரவுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கி, பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    உள்ளாட்சித் துறை சம்மேளன பொதுச் செயலர் ஜீவானந்தம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலர் ஐ. ஜெயராஜ், அரியலூர் பகுதிக்குழுச் செலாளர் ஜி.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai