Enable Javscript for better performance
பணி நிறைவு பாராட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    பணி நிறைவு பெற்ற கீழப்பழூவூர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

    அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் அழகப்பா சிமென்ட் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய அன்புச்செழியன் மே 30ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதை முன்னிட்டு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக துரை. மணிவேல் எம்.எல்.ஏ., முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு அன்புச்செழியனை வாழ்த்திப் பேசினர். கீழப்பழூவூர் ஊராட்சித் தலைவர் அரிச்சந்திரன், அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai