Enable Javscript for better performance
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 61 லட்சம் கடனுதவி- Dinamani

சுடச்சுட

    

    மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 61 லட்சம் கடனுதவி

    By அரியலூர்  |   Published on : 02nd June 2015 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 61 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான காசோலைகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் திங்கள்கிழமை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில் 49 மகளிர் சுயஉதவிக் குழு மற்றும் சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் நேரடிக் கடனுதவி ரூ. 57 லட்சம் மதிப்பிலான காசோலைகளையும், மகளிர் திட்டம் சார்பில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ஊக்க நிதயுதவிக்கான காசோலைகள் ரூ. 4 லட்சம் என மொத்தம் ரூ. 61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

    மேலும் மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் ஆட்சியர் வழங்கினார்.

    கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆட்சியர் மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், திட்ட அலுவலர்(புதுவாழ்வு) புவனேசுவரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ. மதியழகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai