Enable Javscript for better performance
அரியலூரில் திமுக செயற்குழு கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் சந்திரசேகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

      மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சுபா. சந்திரசேகரன், கொள்கை பரப்பு துணை செயலர் பெருநற்கிள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர்

    எஸ்.எஸ். சிவசங்கர் சிறப்புரையாற்றினார்.

    இக்கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதியின் 92-வது பிறந்தநாளையொட்டி, அனைத்து அமைப்புகளின் சார்பில் மக்களுக்கு நலத்திட்டங்கள், பள்ளி குழந்தைகளுக்கு

    இலவச நோட்டுப் புத்தகம் வழங்குதல், அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு

    ஏற்படுத்துவது.

    பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி ஆகியவற்றில் ஏற்படும் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும். தவறும்

    பட்சத்தில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவது. சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர், பெரியார் மாணவர் அமைப்பு இயங்க தடை விதித்த மத்திய மனிதவள

    மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் கண்டனம் தெரிவிப்பது. என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai