Enable Javscript for better performance
ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக ஜயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக ஜயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டம்

    By ஜயங்கொண்டம்  |   Published on : 04th June 2015 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐஐடி-யில் இயங்கிவந்த அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்ததைக் கண்டித்து, ஜயங்கொண்டத்தில் வழக்குரைஞர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன் வழக்குரைஞர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர் சங்கத் தலைவர் பூ. ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் ஆர். ராஜவடிவேலு முன்னிலை வகித்தார். வழக்குரைஞர்கள் செல்ல மணிமாறன், சிவராமன், எ. செளந்திரராஜன், சின்னராஜா, என்.எஸ். மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ஜயங்கொண்டம் காந்திபூங்கா முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் கண். கொளஞ்சி, நகரச் செயலர் ரத்தின சிவா, சா. தமிழ்மணி, தேவேந்திரன், நா. சுந்தர், அ.வே. வேல்முருகன் உள்ளிட்டோர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் குணசேகரன், காவல் உதவி ஆய்வாளர் செல்லமுத்து உள்ளிட்ட போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 51 பேரை கைதுசெய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai