Enable Javscript for better performance
தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், திருமானூரில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால், கணவர் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

    திருமானூரைச் சேர்ந்தவர் முருகேசன் (35). கல் உடைக்கும் தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவாராம். கடந்த 1 ஆம் தேதி இரவு முருகேசன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை அவரது மனைவி உஷா கண்டித்துள்ளார்.

    மேலும், உஷா கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே சென்று படுத்துக்கொண்டாராம். காலையில் உஷா வீட்டுக்குள் சென்று பார்த்த போது, முருகேசன் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து திருமானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai