Enable Javscript for better performance
அரியலூரில் ஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் ஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டம்

    By அரியலூர்  |   Published on : 05th June 2015 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநருக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி அரியலூரில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்

    ஈடுபட்டனர்.

    அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராகப் பணியாற்றி வந்தவர் தீ. சடையப்பவிநாயகமூர்த்தி, இவரை கட்டாய பணி ஓய்வில் செல்ல சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டப்பட்டது.

    இதைக் கண்டித்தும் அவருக்கு மீண்டும் பணி வழங்கக் கோரியும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட மையம் சார்பில் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜெ.பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் க. பஞ்சாபிகேசன் வரவேற்றார்.

    மாநிலத் தலைவர் மு. சுப்பிரமணியன், மாநில பொருளாளர் வி. நாகராஜன், மாநில துணைத் தலைவர் சி.பி. ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் மு. காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். வேல்முருகன், மாவட்டச் செயலர் மூ. மகாலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai