Enable Javscript for better performance
கணவனின் இரண்டாவது திருமணத்தை தடுத்து நிறுத்தினார் முதல் மனைவி- Dinamani

சுடச்சுட

    

    கணவனின் இரண்டாவது திருமணத்தை தடுத்து நிறுத்தினார் முதல் மனைவி

    By ஜயங்கொண்டம்  |   Published on : 05th June 2015 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே வியாழக்கிழமை கணவருக்கு நடைபெற இருந்த இரண்டாவது திருமணத்தை முதல் மனைவி தடுத்து நிறுத்தினார்.

    ஜயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்த ஜெயராமன் மகன் மணிகண்டன் (27). இவர் ஓசூர் தர்கா பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகள் நாகம்மாள் (30) என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மணிகண்டன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மனைவியை விட்டு பிரிந்து தனது ஊருக்கு வந்துவிட்டார்.

    இந்நிலையில் மணிகண்டனுக்கும், அரியலூர் மாவட்டம் வாணத்திரையான்பட்டினத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகள் உஷாவுக்கும் நாயகனைப்பிரியாள் கிராமத்தில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த நாகம்மாள், ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமாரி திருமண மண்டபத்துக்குச் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி மணிகண்டன் மற்றும் மணப்பெண் உஷாவை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது மணிகண்டன் நாகம்மாளுடன் வாழ்வதாகக் ஒப்புக் கொண்டார். மணப்பெண் உஷா அவரது பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai