Enable Javscript for better performance
ஜயங்கொண்டத்தில் புதிய தாலுகா அலுவலகம்: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டத்தில் புதிய தாலுகா அலுவலகம்: ஆட்சியர் ஆய்வு

    By அரியலூர்,  |   Published on : 05th June 2015 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வர் ஜெயலலிதாவால் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட ஜயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தை அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் பார்வையிட்டார்.

    முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம், அரியலூர் மாவட்டத்தில், ரூ. 2 கோடியே 16 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் வருவாய்த் துறை அலுவலகக் கட்டடங்களை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

    ஜயங்கொண்டத்தில் திறக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரைதளம், முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் செயல்பட உள்ள அலுவலகங்களின் விபரங்களை ஆட்சியர் கேட்டறிந்தார். இதன்பின்னர் ஆட்சியர் கூறியது:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜயங்கொண்டத்தில் புதிதாக ரூ. 1 கோடியே 79 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம், உடையார்பாளையம் வட்டம், வரதராஜன்பேட்டை கிராமத்தில் ரூ. 7 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிராம நிர்வா அலுவலருக்கான குடியிருப்புடன் கூடிய கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், மற்றும் உடையார்பாளையம் வட்டம், ஆண்டிமடம் கிராமத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள குறுவட்ட நில அளவருக்கான குடியிருப்புடன் கூடிய அலுவலகம் என மொத்தம் ரூ. 2 கோடியே 16 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டடங்களை தமிழக முதல்வர் திறந்து

    வைத்துள்ளார் என்றார்.

    இதில் உடையார்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் அ. ராஜகோபாலன், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் தாமரை.எஸ். ராஜேந்திரன், ஒன்றியக்குழுத் தலைவர் கண்ணகிகுப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai