ஜயங்கொண்டம் அருகே சாலை விபத்து: 2 இளைஞர்கள் சாவு
By ஜயங்கொண்டம் | Published on : 05th June 2015 03:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் செந்தில்குமார் (22). இவர் தனது உறவினர் ஓலையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல் மகன் கருப்பசாமியுடன் (21) வியாழக்கிழமை காலையில் மோட்டார் சைக்கிளில் இளையபெருமாள் நல்லூர்-கங்கைகொண்டசோழபுரம் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் மோதியது. இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த கருப்பசாமி ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளர் ரவி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றார்.