Enable Javscript for better performance
தா.பழூர் வட்டார விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா- Dinamani

சுடச்சுட

    

    தா.பழூர் வட்டார விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா

    By அரியலூர்  |   Published on : 05th June 2015 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தா.பழூர் வட்டார விவசாயிகள் திருவாரூர் மாவட்டத்துக்கு கண்டுணர்வு சுற்றுலாவாக அண்மையில் சென்று வந்தனர்.

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் அட்மா திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை விவசாயப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான நெல் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.இதில் பாரம்பரிய நெல் வகைகளான சீரகச்சம்பா, மாப்பிள்ளை சம்பா, கிச்சடி சம்பா, சூரக்குறுவை, சேலம் சன்னாசி, சிவப்பு குருவிகார் போன்ற பாரம்பரியமிக்க நெல் ரகங்களையும், அவை பூச்சி நோயை எதிர்த்து வளரும் தன்மை குறித்தும், பாரம்பரிய நெல்லில் அடங்கியுள்ள மருத்துவக் குணங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

    மேலும் இயற்கை முறையில் பூச்சி நோயைக் கட்டுப்படுத்தும் முறைகளான அமுதக்கரைசல், மூலிகைப்பூச்சிவிரட்டி போன்ற இயற்கை வேளாண் யுக்திகள் குறித்தும் விவசாயிகள் அறிந்து கொண்டனர். கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகளுக்கு 2 கிலோ பாரம்பரிய நெல் விதை வழங்கப்பட்டது. கண்டுணர்வு சுற்றுலாவில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சகாதேவன் உள்ளிட்ட விவசாயிகள் 8 பேர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai