Enable Javscript for better performance
பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு உடையார்பாளையம் கோட்டாட்சியர் ராஜகோபால் தலைமை வகித்து, மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைப்பதற்கான பள்ளி, சமுதாயக்கூடம் போன்ற இடங்களை தேர்வு செய்தல், தீயணைப்பு மீட்புக் குழு மற்றும் சுகாதாரத் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பொதுப்பணித் துறை சார்பில் ஆறு மற்றும் ஏரிகள் உள்ள பகுதிகளில் உடைப்புகளை சரி செய்ய மணல் மூட்டைகளை அந்தந்த பகுதிகளில் ஆயத்தமாக வைத்தல் ஆகியவை குறித்து பேசினார்.

    கூட்டத்தில் ஜயங்கொண்டம் வட்டாட்சியர் ஸ்ரீதர், செந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் துரைராஜ், மருதையாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை மருத்துவர் லட்சுமிகாயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai