Enable Javscript for better performance
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் சீனிவாச நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை (62). ஓய்வு பெற்ற மின்சார வாரிய அலுவலர். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் கடைவீதிக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சிதம்பரம் சாலையில் சென்ற போது எதிரில் வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலை மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆமணக்கண்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் கொண்டு செல்லும் வழியில் அண்ணாமலை இறந்தார். ஆனந்தகிருஷ்ணன் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஜயங்கொண்டம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai