Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டத்தில் அரசு விடுதிகளில் மாணவர்கள் சேரலாம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் அரசு விடுதிகளில் மாணவர்கள் சேரலாம்

    By அரியலூர்,  |   Published on : 06th June 2015 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிட நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு அழை ப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு கல்லூரி மாணவர் விடுதியும், 1 ஐடிஐ மாணவர் விடுதியும், 13 பள்ளி மாணவர் விடுதிகளும், 7 பள்ளி மாணவியர் விடுதிகளும்,

    செயல்பட்டு வருகிறது. இவற்றில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள், கல்லூரிகளில் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் மேற்படி விடுதிகளில் சேர்ந்து பயன்பெறலாம்.இதற்கு மாணவ, மாணவிகளின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விடுதியிலிருந்து மாணவர் குடியிருப்பு 5 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இது பொருந்தாது.மாணவ, மாணவிகளுக்கு விடுதிகளில் தரமான உணவு காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் வழங்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகள் ஆதிதிராவிட நல விடுதிகளில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.2015-16 ஆம் ஆண்டுக்கு விடுதியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் விடுதிக் காப்பாளர், காப்பாளினியிடம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அந்தந்த காப்பாளர், காப்பாளினியிடம் ஜூன் 19-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai