Enable Javscript for better performance
ஆதிச்சனூர் பள்ளியில் உலக சூற்றுச்சூழல் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆதிச்சனூர் பள்ளியில் உலக சூற்றுச்சூழல் தின விழா

    By அரியலூர்,  |   Published on : 06th June 2015 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், தா. பழூர் ஒன்றியம், ஆதிச்சனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் உலக சூற்றுச்சூழல் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெலின் செல்வபிரிடா தலைமை வகித்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சுற்றுச்சூழலை வலியுறுத்தும் வகையில் பேரணி நடத்தினர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வாழ்வாதாரத் திட்ட இயக்குநர் சாமுவேல் இன்பதுரை கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். இதில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் விஜயா, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் அசோகன், ஊராட்சித் தலைவர் அனிதா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கனகவள்ளி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். உதவி ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai