Enable Javscript for better performance
உலக சுற்றுச்சூழல் தினம்: நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    உலக சுற்றுச்சூழல் தினம்: நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

    By அரியலூர்,  |   Published on : 06th June 2015 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முதன்மை அமர்வு நீதிபதி டி. கிருஷ்ணவல்லி மரக்கன்றுகளை வெள்ளிக்கிழமை நட்டார்.

    உலக சுற்றுச்சூழல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, அரியலூர் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் அரியலூர் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி. கிருஷ்ணவல்லி கலந்துகொண்டு, இயற்கை வளத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மரக்கன்றை நட்டார்.

    இதில் அரியலூர் சார்பு நீதிபதி ஜி. நாகராஜன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெகதீசன், கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், நீதிமன்ற மேலாளர் ஜஸ்டஸ், வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் முத்துக்குமரன், அரசு வழக்குரைஞர் சண்முகம், கொளஞ்சியப்பன், ராஜா, வழக்குரைஞர்கள் அ. செல்வராஜ், காந்திதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai