Enable Javscript for better performance
காரைக்குறிச்சியில் வேகத் தடை அமைக்கக் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்குறிச்சியில் வேகத் தடை அமைக்கக் கோரி சாலை மறியல்

    By அரியலூர்  |   Published on : 06th June 2015 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகே காரைக்குறிச்சியில் வேகத் தடை அமைக்கக் கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தா. பழூரை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், தா. பழூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலை அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாக விளங்கி வருவதால், அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் காரைக்குறிச்சி கடைவீதியிலுள்ள சாலையில் வேகத் தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். ஆனால் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், காரைக்குறிச்சி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை காரைக்குறிச்சி - கும்பகோணம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். மேலும், அந்த வழியாக வந்த மணல் லாரி, டிராக்டர்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தா. பழூர் போலீஸார் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வேகத் தடை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் அளித்த உறுதியளித்ததை ஏற்று, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai